தமிழ்நாடு

tamil nadu

திருச்சி மாநகராட்சியுடன் இணையும் 20 ஊராட்சிகள்- பட்டியல், வரைபடம் வெளியீடு

By

Published : Sep 3, 2021, 10:50 AM IST

20-village-panchayath-will-join-trichy-corporation

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ள 20 ஊராட்சிகள் மற்றும் ஒரு டவுன் பஞ்சாயத்து அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

திருச்சி:திருச்சி மாநகராட்சியில் தற்போது, 65 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை 10 லட்சத்து 45ஆயிரத்து 436ஆக உள்ளது. இந்த மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. இந்த விஸ்தரிப்பு மூலம் திருச்சி மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க அந்தந்த பகுதி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உயரும். அதோடு கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத்திட்டம் கிடைக்காது என்ற அச்சம் காரணமாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி திருச்சி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகள், ஒரு டவுன் பஞ்சாயத்தையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் மாநகராட்சியின் மக்கள் தொகை 13 லட்சத்து 37ஆயிரத்து 570ஆக உயரும்.

மாதவ பெருமாள் கோயில், பிச்சாண்டவர் கோயில், தாளக்குடி, கீரமங்கலம், கூத்தூர், மத குடி, பனையகுறிச்சி, குண்டூர், ஓலையூர், மணிகண்டம், மேக்குடி, கே கள்ளிக்குடி வடக்கு, கே கள்ளிக்குடி தெற்கு, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, மருதண்டகுறிசி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் ஆகிய 20 ஊராட்சிகளும், மணச்சநல்லூர் டவுன்பஞ்சாயத்தும் மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த வரைபடமும், பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:திருட்டுபோன முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் கார்: போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details