தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் பாதுகாப்புப் பணியில் சுமார் 1500 போலீசார் - காவல் ஆணையர்

By

Published : Jan 13, 2023, 5:11 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் சுமார் ஆயிரத்து 500 காவல் துறையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருச்சியில் பாதுகாப்புப் பணியில் சுமார் 1500 போலீசார் - காவல் ஆணையர்

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக திருச்சி மாநகரில் இரண்டு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மன்னார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப்பேருந்து நிலையத்திலிருந்து மதுரை - சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ள நிலையில், அந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா இன்று காலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காவல் துறை ஆணையர் சத்யபிரியா, “பொங்கல் பண்டிகையினையொட்டி சுமார் 1500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இந்த புதிய வழித்தடத்திலிருந்து புறப்படக்கூடிய பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பேருந்துகளை நிதானமாக இயக்க வேண்டும்.

பேருந்து ஓட்டுநர்கள் போதுமான ஓய்வுக்குப் பின்னர் பேருந்துகளை இயக்க வேண்டும். தற்போது மாநகர பகுதிகளில் விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் காவல் துறையினர் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விபத்துகள் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க:ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. களைகட்டிய பொங்கல் சந்தை..!

ABOUT THE AUTHOR

...view details