ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. களைகட்டிய பொங்கல் சந்தை..!

author img

By

Published : Jan 13, 2023, 1:40 PM IST

Updated : Jan 13, 2023, 3:25 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார ஆட்டுச்சந்தையில் ரூபாய் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விழுப்புரம்: செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் வளர்க்கப்படுகின்றன

இயற்கையான சத்தான தாவரங்களை இந்த ஆடுகள் உட்கொள்வதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்களால் வளர்க்கப்படும் இந்த வெள்ளாடுகளை தேனி, கம்பம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஆம்பூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று நடைபெற்ற செஞ்சி வார ஆட்டு சந்தை களைகட்டியது. குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை ரூபாய் 4 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளன. இதனால் விவசாயிகளும்,ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறிப்பாக வெள்ளாடுகள் ஜோடி 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும், குறும்பாடுகள் ஜோடி 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலும் விற்பனை நடைபெற்றது.

இதையும் படிங்க: Pudhumai Penn Scheme: வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்

Last Updated :Jan 13, 2023, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.