இளம் பெண் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நாமக்கல் மாவட்டம் ராமபுரம்புதூரை சேர்ந்த ரமேஷ் மனைவி திருமங்கை (33) என்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து ரமேஷை திருப்பூர் அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கோவிலுக்கு செல்வதாக கூறி வெளியில் சென்ற திருமங்கை, அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை என்பது தெரிந்தது. பிறகு திருமங்கைக்கு பழக்கமானவர்கள், அறிமுகமானவர்கள், நண்பர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவரும், நாமக்கல் ராமபுரம்புதூரில் தங்கி கிரேன் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்த டி.தனபால் (24) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் தனபாலை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமங்கையை தனது அறையில் வைத்து கொலை செய்து, திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உடலை வீசிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் உடலை அங்கிருந்து கொண்டு வர பயன்படுத்தப்பட்ட தனபாலின் நண்பர் ஒருவர் வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
ரமேஷுக்கும் திருமங்கைக்கும் திருமணமாகி 6 மாதங்களாகிறது. ரமேஷ் ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கைக்கு தாய், தந்தை உள்பட யாரும் இல்லாத நிலையில், ரமேஷின் கடைக்கு சாப்பிட சென்று வந்த வகையில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதாகவே தனபாலுடன் திருமங்கைக்கு பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சில நாள்கள் தனபாலுடன் பேசாமல் இருந்தவர், பிறகு பேசத் தொடங்கியுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி பகல் தனபாலின் அறைக்கு திருமங்கை சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் தனபால் திருமங்கையை கழுத்தில் காலை வைத்து மிதித்து, துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளார். சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க திருமங்கை வாயில் சட்டைத் துணியை வைத்து அழுத்தியுள்ளார். கொலை செய்த பிறகு தனது நண்பர் ஒருவரின் காரை வாங்கிவந்து, நள்ளிரவு 1 மணியளவில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்து உடலை வெளியில் எடுத்து, வேனில் ஏற்றி கரூர் சென்றுள்ளார்.
vehicle used by the murderer கரூர் பகுதியில் உடலை வீச லாவகமான இடம் கிடைக்காமல் அப்படியே இடம் தேடியவாறு வந்தபோது, திருப்பூரின் எல்லையான அமராவதி ஆற்றோரத்தின் பக்கவாட்டில் சாலை செல்வதைப் பார்த்து, உள்ளே சென்று 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் உடலை வீசிச் சென்றுள்ளார் என்றனர்.