தமிழ்நாடு

tamil nadu

பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க 11 தனிப்படை...!

By

Published : Feb 26, 2020, 11:16 PM IST

திருப்பூர்: பல்லடம் அடுத்த பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளையடித்த குற்றவாளிகளைப் பிடிக்க 11 தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி
கொள்ளையடிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி

திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் லாக்கர் உடைக்கப்பட்டு சுமார் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகத் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பதினொரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படையினர் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெளிமாநிலங்களில் கொள்ளையர்கள் பதுங்கியுள்ளார்களா என்பது குறித்தும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி

மேலும், இந்த வங்கிக் கொள்ளையில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அந்த நகைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பல்லடத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம், நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details