தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்ற இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது

By

Published : Mar 20, 2021, 11:34 AM IST

ஆம்பூர் அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்ற இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Young Man arrested under Pocso Act Aambur latest news Pocso Act இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ஆம்பூர் போஸ்கோ
Young Man arrested under Pocso Act Aambur latest news Pocso Act இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ஆம்பூர் போஸ்கோ

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டேரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 20 வயது அஜீத் என்ற இளைஞர், கடந்த 13.03.2021 ஆம் தேதி திருமண ஆசைக்காட்டி அழைத்துச்சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இளைஞர் ஒருவர் சிறுமியை திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற அஜீத் என்ற இளைஞரை வேலூர் சேர்க்காடு பகுதியில் கைதுசெய்தனர்.

மேலும் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அஜீத்திடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இது திராவிட மண்- ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details