தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு : முதியவர் கைது

By

Published : Oct 6, 2020, 1:23 PM IST

திருப்பத்தூர் : சந்திரபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா செடி வளர்த்து வந்த முதியவர் கைது
கஞ்சா செடி வளர்த்து வந்த முதியவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், சந்திரபுரம் அருகேயுள்ள ‌கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தர்மன் (வயது 75). இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்துள்ளார்.

அதனிடையே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடியும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் மாவட்ட போதை தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். அதில் 300க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை அவர் வளர்த்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் முதியவரைக் கைது செய்து கஞ்சா செடியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கண்டெய்னரில் 1000 கிலோ கஞ்சா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details