தமிழ்நாடு

tamil nadu

வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தனியாக இருந்த பெண்களை மிரட்டிய ஊர் நாட்டாமை!

By

Published : Aug 13, 2023, 6:58 AM IST

ஆம்பூர் அருகே பெண்களை மிரட்டி வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தகராறில் ஈடுபட்ட ஊர் நாட்டாமை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

ccc
வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய ஊர் நாட்டாமை

வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தனியாக இருந்த தாய் மற்றும் மனைவியை மிரட்டிய ஊர் நாட்டாமை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னமலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதே கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

இந்த நிலையில், சங்கரின் வீட்டில் கட்டப்பட்டு உள்ள சுற்றுச்சுவர் சின்னமலையாம்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான பொதுச்சொத்து எனவும், அதனை உடனடியாக இடிக்க வேண்டும் எனக் கூறி சின்னமலையாம்பட்டு ஊர் நாட்டாமை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக சங்கரிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

பின்னர், இது குறித்து சங்கர் வீட்டின் பட்டா மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்து இது தங்களின் பூர்வீக இடம் எனவும், இதனை தற்போது ஊர் நாட்டாமை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பொதுச்சொத்து எனக் கூறி பிரச்னையில் ஈடுபட்டு வருவதாக மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆம்பூர் வட்டாச்சியர் மற்றும் வாணியம்பாடி கோட்டாச்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:"சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியை முளையிலேயே அகற்றிடுக" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஆனால், அதிகாரிகள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சங்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சின்னமலையாம்பட்டு ஊர் நாட்டாமை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சங்கரின் வீட்டிற்கு வந்து அவரது வீட்டின் சுற்றுச்சுவரை கடப்பாரையைக் கொண்டு உடைத்து எரிந்து சங்கரின் தாய் மற்றும் அவரது மனைவியை மிரட்டி உள்ளனர்.

பின்னர், ஊர் நாட்டாமை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்தது குறித்தும், வீட்டில் உள்ள பெண்களை மிரட்டியது குறித்தும் உமராபாத் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்தும் உமராபாத் காவல் துறையினர் இதுவரையில் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வீட்டின் உரிமையாளர் சங்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் பதிலில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்!

ABOUT THE AUTHOR

...view details