தமிழ்நாடு

tamil nadu

”தாய்மொழி கல்வி தவறு எனக் கருதும் எண்ணம் கலைய வேண்டும்” - மயில்சாமி அண்ணாதுரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 7:08 PM IST

Updated : Jan 4, 2024, 7:43 PM IST

தாய்மொழி கல்வி தவறு எனக் கருதும் எண்ணம் மாணவர்களிடம் கலைந்து சாதனையாளராக வளர வேண்டும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

mayilsamy annadurai
மயில்சாமி அண்ணாதுரை

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் பாரதிதாசன் பொரியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பத்மஸ்ரீ விருது பெற்ற, முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்குப் பட்டமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மத்தியில் ’அச்சம் தவிர்’ என்ற தலைப்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர் பேசியதாவது “ செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சி1960களிலேயே தொடங்கிவிட்டது.

இதில் அமெரிக்கா 5 ஆவது முறையும், ரஷ்யா 9 ஆவது முறையும் முயற்சி செய்து வெற்றியடைந்தது. அதிலும் குறிப்பாக ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் செல்ல ஒரு அச்சமடைந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், அந்த அச்சத்தைத் தவிர்த்து 2013 ஆம் ஆண்டு நாம் அனுப்பி மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. அப்போது அறிவியலில் இந்தியா புதிய சரித்திரம் படைத்தது.

இதன் வெற்றி பயணத்தில் உழைத்த பலநூறு அறிவியலாளர்களில், 90 சதவிகிதம் பேர் அரசு பள்ளிகளில் தாய் மொழியில் படித்தவர்கள். எனவே அரசுப் பள்ளிகள் படிப்பது குறித்து அச்சம் தவிர்க்க வேண்டும். தாய் மொழி கல்வி தவறெனக் கருதும் எண்ணத்தை விட்டு சாதனையாளராக வளர வேண்டும்.

அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்கா, ஐரோப்பா செல்ல வேண்டும். இந்திய எல்லையில் பாகிஸ்தானும், சீனாவும், பயமுறுத்திய போது, பொக்ரானில் அனுவெடுத்து, எல்லைக்காவலில் அச்சம் தவிர்த்தோம். மேதகு கலாம் படைத்த சாதனை தான் எஸ்.எல்.வி.

60 வயதில் பணி ஓய்வு என்பது போய், 40, 50 வயதில் பணி நிறைவு என்பது பலதுறைகளில் வழக்கமாகி வருகிறது. ஆண் சம்பாதிக்க, பெண் வீட்டைக் கவனிக்கும் என்னும் நிலை மாறி,ஆணும்,பெண்ணும் அனைத்து துறைகளிலும், சம பங்களிப்பு அளிக்கும் நிலை வந்துவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில் நாம் ஒரே பணியில் ஆயும் முழுக்க இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தனது பணியில் புதுப்புது யுக்திகளை கற்று அல்லது புதிய பணிகளுக்கு ஏற்றார் போல், தனது திறமைகளைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்,அதற்கான மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வெள்ள நிவாரண நிதி: தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் அமிஷ்சாவை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Last Updated :Jan 4, 2024, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details