தமிழ்நாடு

tamil nadu

15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி!!

By

Published : Aug 6, 2022, 12:53 PM IST

தூத்துக்குடி மாநகராட்சி 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி!!
15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி!!

தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி துவக்கி வைத்தார். இந்நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நேற்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2008 - 2011 திமுகவை சேர்ந்த கஸ்தூரி தங்கம், 2011 - 2014 அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா, 2014 - 2016 அதிமுக அந்தோணி கிரேஸ், பதவி வகித்தனர். தற்போது திமுகவை சேர்ந்த என்.பி.ஜெகன் பதவி வகித்து வருகிறார்.

15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி!!

தூத்துக்குடி மாநகராட்சியில், 4 மண்டலங்கள் 60 வார்டுகள் உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி தரைவழி, கடல்வழி, ரயில் வழி, வான்வெளி ஆகிய நான்கு போக்குவரத்து வசதிகளுடன் இந்தியாவின் 10வது துறைமுக மாநகராட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருச்செந்தூா் கோவிலில் யானைக்கு பச்சரிசி மாவு பூசி சிறப்பு வழிபாடு!!

ABOUT THE AUTHOR

...view details