திருச்செந்தூா் கோவிலில் யானைக்கு பச்சரிசி மாவு பூசி சிறப்பு வழிபாடு!!

By

Published : Aug 6, 2022, 8:26 AM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

thumbnail

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடைவீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரு ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரமூா்த்தி நாயனாா் குருபூஜை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக தெய்வானை யானையை 6 கிலோ பச்சரிசி மாவு கொண்டு உடல் முழுவதும் பூசி வெள்ளை யானையாக மாற்றப்பட்டது. தங்க சப்பரத்தில் ஸ்வாமி குமர விடங்கப்பெருமான் தேவியருடன் எழுந்தருள முன்னே வௌ்ளை யானை ஒய்யாரமாய் ஆடி அசைந்து சென்றது. 4 ரதவீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் அரோகரா கோஷங்களுடன் தாிசனம் செய்தனா்.

Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.