தமிழ்நாடு

tamil nadu

அலார்ட்டா இருங்க! சைக்கிளில் நைட் ரவுண்ட்ஸ் செய்த தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன்!

By

Published : Feb 20, 2023, 10:20 AM IST

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் சைக்கிளில் ரோந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்தும் ஆய்வு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார். இந்த பணியில் காவல் துணை கண்காணிப்பாளர், பிற காவல் ஆய்வாளர்களும் வாகன சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநகரில் காவல்துறை எவ்வாறு ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் விதமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் நேற்று (பிப்.19) சைக்கிளில் ரோந்து சென்று தீவிர ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், ரோச் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சைக்கிளில் சென்ற அவர், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மத்தியபாகம் பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

மேலும், மத்திய பாகம் பாகம் காவல் நிலையத்திற்கும் திடீரென சென்று காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆய்வால் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ரூ.3,000 சம்பள பாக்கிக்காக தற்கொலைக்கு முயன்ற கட்டட தொழிலாளி!

ABOUT THE AUTHOR

...view details