தமிழ்நாடு

tamil nadu

ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் - கனிமொழி எம்.பி.

By

Published : Aug 26, 2020, 7:12 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும்போது மக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

kanimozhi
kanimozhi

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அம்மாநகராட்சி பகுதியில் நடந்துகொண்டிருக்கும் புதிய சாலைகள், கால்வாய் மற்றும் பூங்காக்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

ஸ்டேட் பேங்க் காலனி, வடிகால் கால்வாய் பணிகளையும், அண்ணாநகர் மெயின் ரோட்டில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு 6 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பூங்கா, இரண்டு அறிவியல் பூங்கா ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாநகராட்சி நிர்வாகம் மழைக்காலம் தொடங்கும் முன்பே திட்டப்பணிகளை துரிதமாக முடுக்கிவிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்னும் முழுமையாக முடிப்பதற்கு சில காலம் ஆகும். ஸ்மார்ட் சிட்டி பணிகளைத் தவிர மாநகராட்சியில் வேறு எந்த பணிகளும் நடைபெறுவதில்லை" எனக் கூறினார்.

அரசுப்பணிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி.

அப்போது, நகரிலுள்ள மற்ற சாலைகள் பழுதடைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும், அப்போது அனைத்து வேலைகளும் துரிதமாக நடைபெறும்" என்றார்.

இதையும் படிங்க:கறுப்பர் கூட்டம் கார்த்திக்கிற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின்!

ABOUT THE AUTHOR

...view details