தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள் - பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!

By

Published : Jan 8, 2023, 10:55 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள்- இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்..!
திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள்- இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்..!

திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள் - பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் இன்று(ஜன.08) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனையடுத்து அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிறந்த பரிகார ஸ்தலமாகவும் இந்த கோயில் விளங்கி வருகிறது. மேலும் இந்த கோயில் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கோயிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் ஐயப்ப பக்தர்கள், பாதயாத்திரை வரும் பக்தர்கள் என கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடி அங்கப்பிரதட்சணம் செய்தும் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூர் கோயில் வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது.

இதையும் படிங்க:ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

ABOUT THE AUTHOR

...view details