தமிழ்நாடு

tamil nadu

சத்துணவில் அழுகிய முட்டை விவகாரம்.. அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிராக தேசிய அளவில் விமர்சனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 4:27 PM IST

Updated : Nov 16, 2023, 5:28 PM IST

Minister Geetha jeevan: சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவனின் விளக்கத்தை சமூக வலைத்தளத்தில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

people on social media is criticizing the social welfare minister explanation on giving rotten eggs in Sathunavu scheme
கீதா ஜீவன் விளக்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனம்

தூத்துக்குடி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் மதிய உணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட 2,115 முட்டைகள், வேகவைத்தபோது அழுகிய நிலையில் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மாணவ, மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மற்றும் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் பாஜக தலைவர் அண்ணாமலையின் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "முட்டை விநியோகம் செய்பவர் முட்டைகளை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்.

முட்டையை உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனை செய்தனர். தமிழ்நாடு அரசுக்கு முட்டை விநியோகம் செய்பவர் திங்கள் புதன், சனி அல்லது வெள்ளி ஆகிய மூன்று நாள் கொண்டு வருவார். அதில் ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு கலரில் முத்திரை வைக்க வேண்டும். ஏனென்றால் பழைய முட்டை உபயோகப்படுத்திவிட கூடாது என்ற காரணத்தால், ஆகவே, அன்று முட்டையில் கருப்பு கலர் மையில் முத்திரை வைத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு என முட்டையில் போடப்பட்டு இருந்தது. அன்று மழையில் தார்பாய் இல்லாமல் வண்டி வந்துருக்கு. அப்போது கருப்பு மை மழை நீரில் ஊறி முட்டையில் கருப்பு கலர் இறங்கி உள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டாச்சு. எதிலாவது குற்றச்சாட்டு கண்டு பிடிக்கலாம் என இருந்தவர்கள் இதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு அல்ல. சமூக நலத்துறை முறையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நல்ல அவித்த தரமான முட்டை வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்த செய்தியை உடனடியாக ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் முழுமையாக பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில் தான், மழையால் முட்டை மீது வைக்கப்பட்டிருந்த கறுப்பு மை ஊறி முட்டைக்குள் இறங்கி விட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் அளித்த விளக்கமானது, தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

வலிக்க, வலிக்க முட்டை போடும் கோழிக்கு தெரியாது, தன் மீது பழி போட்டு இப்படி பணம் சம்பாதிக்க முடியும் எனவும், உருட்டா இருந்தாலும் அதில ஒரு நியாயம் வேண்டாமா? தெர்மால்கோல் ராஜூவையே மிஞ்சிருவாங்க போல முட்டை அமைச்சர் என பலரும் சமூக வலைத்தளங்களில் கீதா ஜீவனை விமர்சித்து வருகின்றனர்.

மேலும், அமைச்சரின் முட்டை கதையை கேட்கும் போது கேப்டன் விஜயகாந்த் நடித்த தமிழ்செல்வன் படத்தில் வரக்கூடிய முட்டை டெண்டர் சீன் தான் நியாபத்திற்கு வருது. இவ்வாறு சமூக வலைதளங்களில் கமெண்டுகளும், மீம்ஸ்களும் உலாவந்து கொண்டு இருக்கின்றன.

அழுகிய முட்டை விவகாரத்தில் ஒரு குற்றம் நடத்துள்ளது. அதன் மீது நீங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தோ, எடுத்த நடவடிக்கை குறித்தோ தரக்கூடிய விளக்கத்தை தாண்டி, அந்த குற்றத்தை மூடி மறைக்க அமைச்சர் கீதாஜீவன் முயன்று அதற்கு ஒரு விஞ்ஞான ரீதியான விளக்கத்தை கொடுத்திருப்பத்தை தான் ஏற்று கொள்ள முடியாமல் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த முட்டை விவகாரத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் கையில் எடுத்து கடும் வைரலாக்கி கடும் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள்.. அமைச்சர் கீதா ஜீவன் அளித்த விளக்கம் என்ன?

Last Updated : Nov 16, 2023, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details