தமிழ்நாடு

tamil nadu

குடிநீர் வடிகால் நீர்த்தேக்கத்தில் புதுமண ஜோடி சடலம்.. திருச்செந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்!

By

Published : Apr 15, 2023, 9:57 AM IST

திருச்செந்தூர் அருகே குடிநீர் வடிகால் நீர்த்தேக்கத்தில் புதுமண தம்பதிகள் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி:திருச்செந்தூர் மேலாத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மகன் பழனிக்குமார் ( வயது 30). இவர் கேரள மாநிலத்தில் இரும்புக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டை சேர்ந்த முத்துமாரி (வயது 21) இருவருக்கும் கடந்த 10-ஆம் தேதி அதாவது நான்கு நாட்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வியாழன் அன்று காலையில் புதுமண தம்பதிகள் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். இரவு வரை வீடு திரும்பாததால் பெற்றோர் பழனிக்குமாரின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

இதனால் பெற்றோர் வெள்ளிக்கிழமை காலையில் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளனர். அப்போது பழனிக்குமார் -முத்துமாரி தம்பதிகள் மேலாத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் காவல் நிலையம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேநேரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுமண தம்பதியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான நான்கே நாட்களில் புதுமண ஜோடி நீர்த்தேக்கத்தில் சடலமாக கிடந்த சம்பவம் மேலாத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலி ஆவணம் மூலம் ரூ.17 லட்சம் ஆட்டைய போட்ட ஜோடி.. வேலூரில் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details