தமிழ்நாடு

tamil nadu

பட்டப்பகலில் பயங்கரம்: செய்துங்கநல்லூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

By

Published : Sep 23, 2019, 5:31 PM IST

Updated : Sep 25, 2019, 8:21 AM IST

தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிமன்யூ

தூத்துக்குடி மாவட்டம் சந்தையடியூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அபிமணி செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக் படித்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் அபிமணி சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது தலைக்கவசம் அணிந்தபடி எதிரே நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் அபிமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலையான மாணவர் அபிமணி

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கைப்பந்து விளையாட்டின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவனை வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Intro:தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே கல்லூரி அருகே கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் சந்தையடியூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமன்யூ மூன்றாம் ஆண்டு மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறான்

இன்று மதியம் மாணவன் அபிமன்யூ கல்லூரி உணவு இடைவேளையின் போது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சாப்பிட சென்று கொண்டிருந்தபோது கல்லூரி அருகே எதிரே வந்த மூன்று நான்கு பைக்குகளில் ஏழு எட்டு பேர் கொண்ட தலைக்கவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் கல்லூரி மாணவன் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இதுகுறித்து செய்துங்கநல்லூர் வழக்கு பதிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.Conclusion:
Last Updated :Sep 25, 2019, 8:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details