தமிழ்நாடு

tamil nadu

‘மக்கள் நலத்திட்டம் செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்கவில்லை’ - எம்பி கனிமொழி குற்றச்சாட்டு

By

Published : Sep 25, 2022, 10:50 PM IST

மக்கள் நலத்திட்டம் செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்கவில்லை- எம்பி கனிமொழி  குற்றச்சாட்டு!

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதியை வழங்குவதில்லை என்று வீரமாமுனிவர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி:கோவில்பட்டி அருகேவுள்ள காமநாயக்கன்பட்டியில் தமிழின் பெருங்காப்பியமான தேம்பாவணி தந்த வீரமாமுனிவர் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்; “தமிழர்களுக்காக, மக்களுக்காக செய்து தந்திருக்கக்கூடிய மிகப்பெரிய பணியை நமக்கு தந்திருக்கக் கூடியவர் நம்முடைய வீரமாமுனிவர். அந்த வகையிலே அவரை போற்றக்கூடிய வகையிலே நம்முடைய அரசு அவருக்கான மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை நட்டியுள்ளோம்.

நாம் வெவ்வேறு பகுதிகளிலோ வேற நாடுகளிலோ வாழக்கூடியவர்களாக கூட இருக்கலாம் ஆனால் நாம் தமிழால் இணைக்கப்பட்டவர்கள். நமக்கும் வெளி நாட்டில் இருந்து வந்த வீரமாமுனிவர்க்கும் இருக்கக்கூடிய உறவு என்பது தமிழ் மொழியில் தான் நம் தமிழ் மீது இருக்கக்கூடிய அன்பு அவர் தமிழுக்காக ஆற்றி இருக்கக்கூடிய பணிகள் இதுதான் நம்மை இனமாக கட்டிப்போட்டு உள்ளது.

அதனை போற்றக்கூடிய வகையில் தான் இந்த நிகழ்வு இந்த மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலைஞர் அவர்கள் எப்போதும் ஒன்றை சொல்லுவார் அதிகாரிகளிடம் அவர் சொல்வது மக்களுக்கான திட்டத்தை செய்ய வேண்டும் எப்படி செய்யக்கூடாது என்பது எனக்கு பிரச்சனை இல்லை இப்படி செய்வதற்கான வழியை சொல்லுங்கள் ஏன் என்றால் இது மக்களுக்கான திட்டம்.

மக்கள் நலத்திட்டம் செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்கவில்லை- எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

உறுதியாக மக்கள் நலத் திட்டங்களை அதை செய்வதற்கான வழிவகையை அதிகாரிகள் தேடி தருவார்கள் அதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்பதை நீங்க நான் தெரிவித்துக் கொள்கிறேன். எம்பி நிதியிலிருந்து கழிவறை வசதி பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள் ஆனால் மத்தியில் உள்ள ஒன்றிய அரசாங்கம் எங்களுக்கு தரவேண்டிய எம்பி நிதி சரியாக வழங்கப்படுவதில்லை அதை கொடுத்தால் நிச்சயமாக விரைவிலே செய்து கொடுப்பேன்” என்று பேசினார்‌.

இதையும் படிங்க:‘லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையை முன்னாள் அமைச்சர்கள் எதிர்கொள்வார்கள்’ - பிடிஆர் பழனிவேல்

ABOUT THE AUTHOR

...view details