தமிழ்நாடு

tamil nadu

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ.3.50 கோடி

By

Published : Oct 18, 2022, 3:48 PM IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா முடிந்த நிலையில் ரூ.3.50 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 3.50 கோடி காணிக்கை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 3.50 கோடி காணிக்கை

தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அடுத்து குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் இந்த ஆண்டு கோயிலுக்கு ரூ. 3.50 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் கடந்த ஐந்தாம் தேதி நள்ளிரவில் நடைபெற்றது.

தசரா திருவிழாவை முன்னிட்டு வேடம் அணிந்த பக்தர்கள் குழுவாகவும், தனியாகவும் சென்று காணிக்கையாக பணத்தை பெற்றனர். அதை அவர்கள் சூரசம்காரம் நடந்த நாளில் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இந்நிலையில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி ஐந்து நாட்களாக நடைபெற்றது. இதில் 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 2,416 கிராம் வெள்ளியும், 135 கிராம் தங்கமும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறப்பு

ABOUT THE AUTHOR

...view details