தமிழ்நாடு

tamil nadu

தேவர் ஜெயந்தி: தூத்துக்குடியில் கனிமொழி எம்பி மரியாதை

By

Published : Oct 30, 2022, 9:21 AM IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தேவரின் திருவுருவச்சிலைக்கு கனிமொழி எம்பி உள்பட திமுக நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி: கனிமொழி எம்பி மரியாதை
தேவர் ஜெயந்தி: கனிமொழி எம்பி மரியாதை

தூத்துக்குடி:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று (அக் 30) நடைபெறுகிறது. இதனை ஒட்டி தூத்துக்குடி 3ஆவது மையிலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தேவரின் திருவுருவச்சிலைக்கு கனிமொழி எம்பி உள்பட திமுக நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, கலைச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா

ABOUT THE AUTHOR

...view details