தமிழ்நாடு

tamil nadu

பேருந்தை நோக்கி பெட்ரோல் குண்டு வீச்சு.. நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

By

Published : Sep 28, 2022, 6:28 AM IST

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நடவடிக்கை இல்லையென்றால் பாஜக அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி செல்லும்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நடவடிக்கை இல்லையென்றால் பாஜக அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி செல்லும் ()

பாஜக நிர்வாகி பேருந்தை நோக்கி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நகர்வை நோக்கி பாஜக செல்லும் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கூறினார்.

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து பெட்ரோல் குண்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்து மாநில தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி மற்றும் மதுரை பெருங்கோட்டத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன். பால கணபதி, மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் மாணிக்கம் ஆகியோர் சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நடவடிக்கை இல்லையென்றால் பாஜக அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி செல்லும்

இதனடிப்படையில், தூத்துக்குடியை சேர்ந்த பாஜக ஓ.பி.சி அணியின் மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ்-க்கு சொந்தமான தனியார் பேருந்து தூத்துக்குடியில் பயணிகளுடன் புறப்பட்டு செல்லும் போது பஸ் மீது குண்டு வீச முற்பட்ட நிலையில், பெட்ரோல் குண்டு அதிர்ஷ்டவசமாக பஸ் மீது படாததால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அக்குழுவினர் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ் வீட்டில் அவரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், பாஜக மாநில பொது செயலாளர் பொன். பால கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தினங்களுக்கு முன் பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷின் பேருந்தை குறி வைத்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் கூட தாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் 30 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நேரடியாக பாலத்தில் இருந்து அந்த வெடிகுண்டை வீசி இருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா பயன்படுத்தி குற்றவாளிகளை சுலபமாக கண்டுபிடிக்கப்பட வேண்டிய சமயத்தில் அவர்கள், வெளியே உலாவி கொண்டிருப்பது மிக மிக மோசமான விஷயம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை நடந்தது கிடையாது. காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும், துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தால் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது, ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் திமுகவினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டுள்ளனர்.

சிசிடிவி கேமரா மூலம் தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடித்து இருக்கிறார்களா என்று கேட்டால் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் அடுத்த கட்ட நகர்வை நோக்கி பாரதிய ஜனதா கட்சி செல்லும்.

சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய விஷயத்தை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்றால் எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கின்றது என்று பலத்த சந்தேகம் வருகிறது. மேலும், அவர்கள் தீவிரவாதிகளோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது, பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணை தலைவர் சிவராமன், வாரியார், தங்கம் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:பாஜக பிரமுகர் ஆம்னி பேருந்தை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details