தமிழ்நாடு

tamil nadu

திராவிட கொள்கையை புதைத்து சனாதனத்தை புகுத்த பாஜக அலைகிறது: துரை வைகோ

By

Published : Dec 20, 2022, 10:38 PM IST

திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதன தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழ்நாட்டில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என துரை வைகோ சாடினார்.

திராவிட கொள்கையை புதைத்து சனாதானத்தை புகுத்த பாஜக அலைகிறது
திராவிட கொள்கையை புதைத்து சனாதானத்தை புகுத்த பாஜக அலைகிறது

திராவிட கொள்கையை புதைத்து சனாதனத்தை புகுத்த பாஜக அலைகிறது: துரை வைகோ

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்; "பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்துக்கேட்டு விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்படும் என மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

செண்பகா நதி அணைக்கட்டு திட்டம் நீண்ட காலப் பிரச்னைக்குத் தீர்வு காண மதிமுக சார்பில் தமிழ்நாடு அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும். விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை தடுக்க நிரந்தரத் தீர்வு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அட்டவணையில் பிரிவு மூன்றிலிருந்து ஐந்துக்கு மாற்றினால் மட்டுமே, இந்த காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியும்.

பெட்ரோல், டீசல், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம் ஒன்றிய அரசுதான். பாஜக ஆளும் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறி வருவது ஊரை ஏமாற்றும் செயல். பாஜக ஆளும் மாநிலத்தில் ஊழல் இல்லையா, வாரிசு அரசு இல்லையா, கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எரியக்கூடாது.

70 வருடமாக திராவிட இயக்கங்கள் பொய்யை விதைத்து மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார். திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதன தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழ்நாட்டில் புகுத்துவதற்கு பாஜக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக உடன் இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது. இதை அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் உணர வேண்டும்.

பாஜகவின் சனாதன சக்திகளை தமிழ்நாட்டிலிருந்து வேரோடு அகற்றுவதற்கு திமுக, மதிமுகவிற்கு மட்டுமல்ல, அந்த கடமை அதிமுகவிற்கும் இருக்கிறது. மதுவிலக்கு கொள்கை என்பது எங்களுடைய கட்சியின் முக்கியமான கொள்கை. அது தொடர்பாக தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்போம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது அதிமுக மாவட்ட கவுன்சிலர் கடத்தல்?

ABOUT THE AUTHOR

...view details