ETV Bharat / state

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது அதிமுக மாவட்ட கவுன்சிலர் கடத்தல்?

author img

By

Published : Dec 20, 2022, 5:06 PM IST

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலின்போது கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிமுக மாவட்ட கவுன்சிலர் திருவிக அளித்த பேட்டியில் தன்னைக் கடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை எனக் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது அதிமுக மாவட்ட கவுன்சிலர் கடத்தல்?
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது அதிமுக மாவட்ட கவுன்சிலர் கடத்தல்?

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது அதிமுக மாவட்ட கவுன்சிலர் கடத்தல்?

கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் டிச.19ஆம் தேதி மதியம் கரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நடைபெற்றது.

முன்னதாக அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிக என்பவர் திண்டுக்கல் அருகே கடத்தப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் திருவிக கரூர் தனியார் மருத்துவமனையில் (டிச.19)நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறுகையில், “என்னை திண்டுக்கல்லில் கடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்த கும்பலாக இருக்கலாம். நத்தம் காட்டுப்பகுதியில் 5 மணி நேரமாக எனக்குத் தொல்லை கொடுத்தார்கள். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் நான் மனு தாக்கல் செய்யக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு என்னை திண்டுக்கல் அருகே நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் கண்ணாடியை உடைத்து கடத்திச்சென்றனர் .

நடந்து முடிந்துள்ள தேர்தல் உண்மையான தேர்தல் அல்ல. என்னை பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்துள்ளனர். காட்டுப்பகுதியில் மூன்று கார்களில் ஏழு பேர் கொண்ட கடத்தல் கும்பல் கடத்திச்சென்றனர்” எனத் தெரிவித்தார்.

அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்த அதிமுக ஆதரவு தொலைக்காட்சி நிருபர், திமுகவைச் சேர்ந்தவர்கள் கடத்தினார்கள் என கூறும் படி தெரிவித்தார். பின்னர் திமுகவினர் தன்னைக் கடத்தியதாக அவர் கூறினார்.

மேலும், கடத்தப்பட்டதாக கூறப்படும் திருவிக என்பவருடன் உடன் இருந்த அதிமுகவினர் சிலர், மயக்கம் வருவதாக கூறவும் என கூறியவுடன், அதனை அப்படியே ஒப்பித்து விட்டு, பாதியில் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு கடத்தப்பட்டதாக கூறப்படும் திருவிக மருத்துவமனைக்குள் சென்றார்.

மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் ரமேஷ் என்பவர் திமுக வேட்பாளர் தேன்மொழி போட்டியிட்டு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினர் திருவிக தன்னை கடத்தியது யார் என்றே தெரியவில்லை என கரூரில் தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக தரப்போ, ’மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கடத்தல் நாடகம்’ என சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திமுக வெற்றி என அறிவிப்பால் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.