தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

By

Published : Mar 13, 2023, 7:41 AM IST

தூத்துக்குடி அனல் மின் நிலையம்
தூத்துக்குடி அனல் மின் நிலையம் ()

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒன்றாவது, மூன்றாவது, மற்றும் ஐந்தாவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:தமிழக அரசின் மின் பகிர்மான கழகம் மற்றும் மின்சாரவாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையமானது தூத்துக்குடியில் அமைந்துள்ளது. இங்கு 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அனல் மின் நிலையத்தில் ஒன்றாவது யூனிட்டில் கொதிகலன் பஞ்சர் காரணமாகவும், மூன்றாவது யூனிட்டில் கண்ட்ரோல் வால்வு பழுது காரணமாகவும், ஐந்தாவது யூனிட்டில் எலக்ட்ரிக்கல் பழுது காரணமாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாவது நிலையில் ஒன்றாவது யூனிட்டில் கொதிகலன் கசிவு ஏற்பட்டதில், சுமார் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் மூன்றாவது யூனிட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவார் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை கடந்த 7ஆம் தேதி சரி செய்து, மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி - அமெரிக்க பயணி மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details