தமிழ்நாடு

tamil nadu

'ஜூனில் அரசு அறிவித்த நிவாரணப் பொருள்களை பெறாதவர்கள் ஜூலையில் பெறலாம்' - அமைச்சர் காமராஜ்

By

Published : Jul 9, 2020, 11:38 PM IST

திருவாரூர்: ஜூன் மாதம் அரசு அறிவித்த நிவாரணப் பொருள்களை பெறாதவர்கள் ஜூலை 10ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிக்கோட்டை கிராம நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "கரோனா வைரஸ் ஊரடங்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, தொழில், விவசாயம் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வல்லுனர்களுடன் ஆலோசித்து ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துவருகின்றார்.

அதன்படி விவசாயப் பணிகளுக்காக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் சுமார் 521-நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்தாண்டுதான் அதிகபட்சமாக சுமார் 26 லட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ்

மேலும், காரிப் பருவம் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்பதால் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நெருங்கிவருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வரும் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களால் தமிழ்நாட்டில் எங்கும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாய தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது.

ஜூன் மாதம் அரசு அறிவித்த நிவாரணப் பொருள்களை வாங்காதவர்கள், இம்மாதம் 10ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நியாவிலை கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் காமராஜ் தகவல்..!

ABOUT THE AUTHOR

...view details