தமிழ்நாடு

tamil nadu

மிளகாய்ப் பொடி தூவி நகை திருடிய பெண்: விரட்டிப் பிடித்த மக்கள்

By

Published : Sep 4, 2021, 6:44 AM IST

விரட்டிப் பிடித்த மக்கள்

திருவாரூர் கடைவீதியில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடியைத் தூவி ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பியோடிய பெண்ணை மக்கள் விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர்: அலிவலம் சாலையில் வசித்துவருபவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிரண்குமார் (42). இவர் திருவாரூர் கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் புலிவலம் விஷ்ணுதோப்பைச் சேர்ந்த கவிதா (35) என்பவர் தனது கணவரான ஆட்டோ ஓட்டுநர் கணேசனுடன் கிரண்குமாரின் நகைக்கடைக்குச் சென்றுள்ளார்.

கவிதா நகைக்கடையின் வெளியே தனது கணவரை நிற்க வைத்துவிட்டு, பர்தா அணிந்துகொண்டு கடைக்குள் சென்று நகை வாங்குவதுபோல் பேசியுள்ளார். அப்போது திடீரென்று கவிதா கடை உரிமையாளர் கிரண்குமார் மீது மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு அங்கிருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

உடனே கிரண்குமார் கடையின் வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய கவிதாவை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த நகையைப் பறிமுதல்செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கவிதா, அவரது கணவர் கணேசன் ஆகிய இருவரையும் திருவாரூர் டவுன் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவிதா, கணேசன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

திருவாரூர் கடைவீதியில் நகைக்கடை உரிமையாளர் மீது பெண் மிளகாய்ப் பொடி தூவி நகையை எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : கடலூரில் மூன்று ஆசிரியைகளுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details