தமிழ்நாடு

tamil nadu

டெல்டா பகுதியில் காகித ஆலை: முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Sep 6, 2021, 10:42 AM IST

வைக்கோல் கட்டுகள்
வைக்கோல் கட்டுகள் ()

காவிரி டெல்டா மாவட்டத்தில் காகித தொழில்சாலை தொடங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதான தொழில் விவசாயம்.

தற்போது குறுவை சாகுபடி முடிவடைந்துள்ளது. பல இடங்களில் அறுவடை முடிந்து வைக்கோல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வைக்கோல் கட்டுகள் விவசாயிகளிடமிருந்து குறைவான விலைக்கு வாங்கப்பட்டு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், தமிழ்நாடு அரசு,. காவிரி டெல்டா மாவட்டங்களின் மையமாக ஒரு இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு காகித தொழிற்சாலை தொடங்க வேண்டும். காகிதம் தயாரிக்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசே வைக்கோல் கட்டுகளை கொள்முதல் செய்ய வேண்டும் திருவாரூர் மாவட்ட விவசாயகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

காகித தொழிற்சாலை தொடங்கப்பட்டால் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளி வாழ்வாதாரத்தைக் கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதையும் பிடிங்க: சம்பா சாகுபடி - வாய்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details