தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!

By

Published : Feb 14, 2023, 6:10 PM IST

திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மாரியம்மன் கோயில், தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய நான்கு ஏடிஎம் மையங்களில் கேஸ் வெல்டரைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் ரூ.75 லட்சம் பணத்தை கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தலைமையில் 9 தனிப் படைகள் அமைக்கப்பட்டு திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா, ஒடிசா உள்ளிட்டப் பல்வேறு வெளி மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் டாடா சுமோ காரில் மர்ம நபர்கள் வந்து பாரத் ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க:கோவையில் போலி டிராவல்ஸ் நடத்தி மோசடி; 19 கார்கள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details