தமிழ்நாடு

tamil nadu

மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த குழந்தை? அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

By

Published : Jan 25, 2023, 3:32 PM IST

திருவண்ணாமலை அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருவண்ணாமலை: வந்தவாசி கோட்டைக்குள் முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர், இப்ராஹிம். பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். சாய்னா என்ற மனைவியும் அப்துல் ரசூல் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி குழந்தை ரசூலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையொட்டி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 2 நாட்களாக சிகிச்சையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பின் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் கவனிப்பின்றி, அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை இறந்ததாகக் கூறி நேற்று காலையில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் முருகானந்தம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து மாவட்ட இணை இயக்குநர் ஏழுமலை போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பேசிய போராட்டக்காரர்கள் குழந்தையின் மரணத்தின்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மருத்துவ அலுவலர் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும்; அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அரசிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாகக் கூறிய அவர், அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க:அரசு மருத்துவர்கள் ஊழியர்கள் அலட்சியத்தால் சிசு மரணம்? ஆம்பூரில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details