தமிழ்நாடு

tamil nadu

வயலில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம்!

By

Published : Dec 4, 2022, 1:18 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் பேருந்து சாலையோர வயலில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

vandavasi bus accident  bus accident  accident  thiruvannamalai news  thiruvannamalai latest news  வயலில் கவிழ்ந்த பஸ்  பேருந்து  தனியார் பேருந்து  பேருந்து விபத்து  விபத்து  பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து  சாலை விபத்து  திருவண்ணாமலை  வந்தவாசி  வந்தவாசியில் பேருந்து விபத்து  வந்தவாசி விபத்து  வந்தவாசியில் கவிழ்ந்த பேருந்து
வயலில் கவிழ்ந்த பஸ்

திருவண்ணாமலை:காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி தேசூர் வழியாக செஞ்சிக்கு செல்லும் தனியார் பேருந்து, 40 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. வந்தவாசி அடுத்த திரைக்கோவில் கிராமம் அருகே பேருந்து சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

வயலில் கவிழ்ந்த பஸ்

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இன்று காலை செங்கம் அருகே பேருந்து - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details