தமிழ்நாடு

tamil nadu

ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

By

Published : Feb 12, 2023, 11:25 AM IST

Updated : Feb 12, 2023, 5:26 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ. 75 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை
கொள்ளை

ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

திருவண்ணாமலை நகரப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய 4 இடங்களில் நள்ளிரவில் (பிப்.12) பாரத ஸ்டேட் வங்கி, ஒன்இந்தியா வங்கி ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரூ.75 லட்சம் வரை பணம் கொள்ளயடிக்கப்பட்டாத கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்று ஷட்டரை மூடிவிட்டு கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் எந்திரங்களை உடைத்து பணத்தை எடுத்துள்ளனர். கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் எந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்துவிட்டு சென்றுள்ளனர்.

ஒரு பாணியில் நான்கு ஏடிஎம் மையத்திலும் கொள்ளை நடந்துள்ளது. இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமானதால் திருடர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் தினறி வருகின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் நள்ளிரவு முதலே விசாரணையை தொடங்கிவிட்டனர்.

இதையும் படிங்க: வீட்டை உடைத்து பணம் திருட்டு - சிறுவர்கள் கைது

Last Updated : Feb 12, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details