தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

By

Published : Feb 15, 2023, 12:55 PM IST

திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvannamalai Petrol bomb Attacks
Tiruvannamalai Petrol bomb Attacks

Tiruvannamalai Petrol bomb Attacks: திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவண்ணாமலை: கரையான்செட்டி தெருவில் வசித்து வரும் சங்கர் என்பரது வீட்டின் மீது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இன்று (பிப்.14) அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எரிந்து கொண்டிருந்த சத்தம் கேட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்துப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர்.

இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.கரையான்செட்டி தெருவில் வசித்துவரும் சங்கர் திருவண்ணாமலை திமுக தொண்டரணி நகர துணை அமைப்பாளராக பதவி வகித்து கொண்டு பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தப்பி சென்றுள்ளனர்.

நள்ளிரவு சரியாக ஒருமணி அளவில் இரண்டு நபர்கள் சங்கர் வீட்டின் முன்பு வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடும் சிசிடிவி வீடியோ பதிவாகியுள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை (Tiruvannamalai ATM Robbery issue) உடைத்து மர்ம நபர்கள் 75 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேலும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கிச்சூடு - காவல்துறை விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details