தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் ஆண் சடலம்; கொலையா? தற்கொலையா? போலீஸார் விசாரணை

By

Published : May 24, 2020, 1:12 PM IST

திருவண்ணாமலை: ராமவிட்டோபா பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

at  tiruvannamalai 35-year old man's dead body rescued from well
கிணற்றில் ஆண் சடலம்; கொலையா? தற்கொலையா? போலீஸார் விசாரணை...

திருவண்ணாமலை அடுத்த ராமவிட்டோபா நகர் பகுதியில் விவசாய கிணற்றில் சந்தேகமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தண்ணீரில் மிதந்து கிடந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர்
பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் திருவண்ணாமலை நகரில் உள்ள தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாண்டு என்பவரின் மகன் சிவா என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் கிணற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details