தமிழ்நாடு

tamil nadu

வாடகையை உயர்த்தி தரக்கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

By

Published : Sep 15, 2020, 7:51 PM IST

திருவள்ளூர்: வாடகையை உயர்த்தி தரக் கோரி செட்டிநாடு நிலக்கரி முனையத்தை முற்றுகையிட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள், இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

tipper-owners-protest-over-rent-hike
tipper-owners-protest-over-rent-hike

திருவள்ளூர் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள செட்டிநாடு நிலக்கரி முனையத்தில், வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் இறக்குமதி செய்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் அனல்மின் நிலையங்கள், செங்கல் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் நிலக்கரியை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே வாடகையை தற்போது நிலக்கரி முனையை ஒப்பந்ததாரர்கள் வழங்கி வருவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதனால் டீசல் விலை, சுங்க கட்டண உயர்வு, வாகன உதிரிபாகங்கள் விலை ஏற்றம் ஆகியவற்றால் தங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படுவதாகவும், லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதை நிலக்கரி முனையை நிர்வாகத்தினர் ஏற்க மறுத்து, உள்ளூர் லாரிகளுக்கு லோடு ஏற்றுவதை நிறுத்தி விட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் டிப்பர் லாரிகள் மூலம் 90 விழுக்காடு நிலக்கரியை விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வாடகையை உயர்த்தி தரக் கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

இதனால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள், நிலக்கரி கொண்டுச் செல்லும் பணியில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி செட்டிநாடு நிலக்கரி முனையத்தை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:பழனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details