தமிழ்நாடு

tamil nadu

இளம்பெண் தற்கொலை: காதலன் கைது

By

Published : Aug 1, 2020, 11:48 AM IST

திருவள்ளூர்: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காதலித்து ஏமாற்றிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

காதலன் கைது
காதலன் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் காலனியைச் சேர்ந்த மணிமேகலை (21) என்ற பெண் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில் காதலித்து ஏமாற்றியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் தான் அந்த பெண்ணை கொச்சைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக புகார் தெரிவித்து தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பெயரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி அப்பெண்ணின் தற்கொலை தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் பெண்ணை காதலித்து ஏமாற்றிய ராஜ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் காவல் துறையினர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details