ETV Bharat / state

சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது!

author img

By

Published : Aug 1, 2020, 10:28 AM IST

கடலூர்: சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது
ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது

கடலூர் மாவட்டம் கேசன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் இளவரசன் (26). இவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இளவரசன் இணையதளங்களில் சிறுவர் சிறுமிகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை பார்த்தும் பதிவிறக்கம் செய்தும் வந்துள்ளார். மேலும் இதனை அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை தேசிய குழந்தைகள் பாலியல் தடுப்பு மைய அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, இளவரசன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை குழந்தைகள் நலக் குழுவுக்கு உத்தரவிட்டனர். அதனடிப்படையில் கடலூர் சைபர் கிரைம் காவல் துணை ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான காவல் துறையினர் இளவரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 4 சிறுவர்கள் கைது!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.