தமிழ்நாடு

tamil nadu

பெண்ணின் உடலை வழங்க தாமதம்: திருத்தணி அரசு மருத்துவமனை முற்றுகை

By

Published : Nov 6, 2019, 9:53 AM IST

திருவள்ளூர்: திருத்தணியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் உடலை வழங்குவதில் தாமதம் காட்டியதால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

Thiruttani government hospital seiged

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி சாலை இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெயா. இருவருக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை. மேலும் ஜெயா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சிகிச்சைக்காக மனோகரன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட ஜெயாவின் உறவினர்கள்

அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை 11 மணி அளவில் உயிரிழந்தார். ஆனால் மாலை 6 மணி வரை மருத்துவமனை நிர்வாகம் ஜெயாவின் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் சவக்கிடங்கில் கிடப்பில் போட்டுவைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயாவின் உறவினர்களும் அவர் வசிக்கும் தெரு மக்களும் திருத்தணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இது குறித்த தகவலறிந்த திருத்தணி காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்துவந்து போராட்டம் செய்தவர்களிடம் சமரசம் பேசி உடனடியாக உடலைத் தருவதாக உறுதி கூறியபின் அவர்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிஙக்: கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி!

Intro:திருத்தணியில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் உடலை வழங்குவதில் அரசு மருத்துவமனை நிர்வாகம் தாமதம் காட்டியதால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஜெபா வயது 27 இவருக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை மேலும் ஜெப புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜவா பின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை சிகிச்சைக்காக மனோகரன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் காலை 11 மணி அளவில் நடந்தது. ஆனால் மாலை 6 மணி வரை மருத்துவமனை நிர்வாகம் ஜாவாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் சவக்கிடங்கில் போட்டு வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயாவின் உறவினர்கள் மற்றும் காந்தி ரோடு இரண்டாவது தெருவை சேர்ந்த பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் சமரசம் பேசி உடனடியாக சபாவின் உடலை தருவதாக உறுதி கூறிய பின் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் 1மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details