தமிழ்நாடு

tamil nadu

இலவச லேப்டாப் அல்லது டேப் வழங்கல்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

By

Published : Mar 10, 2023, 4:00 PM IST

Updated : Mar 10, 2023, 4:43 PM IST

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவள்ளூர்:தமிழ்நாட்டில் நிதிநிலை சரியானதும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதா அல்லது டேப் வழங்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் குப்பம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச் 10) "மாபெரும் தமிழ் கனவு" விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாட்டில் நிதி நிலை சரியானதும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதா அல்லது டேப் வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். மாபெரும் தமிழ் கனவு திட்டம், இந்த மாதம் இறுதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் திட்டம் இதுவாகும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வாழ்க்கையின் இலக்கை தேர்வுநிர்ணயிக்கும் என்பதால் +2 மாணவர்கள், மகிழ்ச்சியோடு தேர்வு எழுதுங்கள். விடிய விடிய படித்து உடல் நலத்தை கெடுத்து கொள்ளாமல், தேர்வறையில் உறங்காமல் தைரியமாக தேர்வு எழுதுங்கள். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி வரும்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமை சரியானதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். அதன்பின் அவரிடம் மாணவர்கள் சண்டையிட்டு கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், மாணவர்களை தவறாக பேசுவதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.

தவறு செய்தவர்களை திருத்த வேண்டியது பெரியவர்களின் கடமை என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், கரோனா ஊரடங்கு காரணமாக லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களின் விலை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, லேப் டாப் தயாரிப்பு நிறுவனங்கள், மாணவர்களுக்கு லேப் டாப் தயாரித்து கொடுக்க அதிக விலையில் டெண்டர் கோருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் லேப் டாப்கள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படக் கூடியவை என்பதால் டெண்டர் எடுக்க நிறுவனங்கள் முன் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே 2 ஆண்டுகளாக லேப் டாப்கள் வழங்கப்படவில்லை. இருப்பினும், மாணவர்களுக்கு லேப் டாப்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஒரிஜினல் தளபதிக்கே டஃப் கொடுக்கும் ஒன்றிய தளபதி: பட்டியல் போடும் ஹைடெக் எம்எல்ஏ; பின்னணி என்ன?

Last Updated : Mar 10, 2023, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details