தமிழ்நாடு

tamil nadu

வகுப்பறையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

By

Published : Nov 23, 2021, 8:30 PM IST

திடீர் பள்ளம்

திருவள்ளூர் மாவட்டம் கொற்றலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரசு பள்ளி வகுப்பறை ஒன்றில் 10 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு பகுதியில் பெய்த கன மழையால் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பிய நிலையில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகுந்தது. இதன் காரணமாக வகுப்புகளில் தண்ணீர் தேங்கியது.

திடீர் பள்ளம்

இந்த நிலையில், மண் அரிப்பு காரணமாக அங்குள்ள மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

திடீர் பள்ளம்

இதனிடையே பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். பள்ளிக் கட்டடம் முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Rajini calls on Kamal: கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details