தமிழ்நாடு

tamil nadu

மணல் கொள்ளை: காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் அருகிலேயே பறிமுதல்

By

Published : Nov 26, 2021, 9:46 AM IST

மணல் கொள்ளை

திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் ஆந்திரா மணல் பெருவாரியாகக் கடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் அருகிலேயே மணல் பதுக்கிவைக்கப்பட்டதை வருவாய்த் துறையினர் பறிமுதல்செய்தனர்

திருவள்ளூர்: தமிழ்நாட்டின் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் மணல் குவாரிகளுக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. இதனால், கட்டுமான பணிகளுக்கு 'எம்-சாண்ட்' வகையைப் பயன்படுத்திவருகிறோம். இந்நிலையில், ஆந்திராவில் கட்டுமான பணிகளுக்கு மணல் எடுக்க அனுமதி இருப்பதைப் பயன்படுத்தி லாரிகளில் தமிழ்நாட்டுக்கு கடத்தி, மாநில எல்லைப் பகுதிகளில் பதுக்கிவைத்து கடந்த சில மாதங்களாக விற்பனை அதிக அளவில் நடப்பதாகப் புகார்கள் அதிகரித்துவருகின்றன.

உதவி ஆய்வாளர் வீட்டின் அருகிலேயே பறிமுதல்

பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டையில் பல்வேறு இடங்களில் ஆந்திர மணல் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக பொதட்டூர்பேட்டை காவல்உதவி ஆய்வாளர் ராக்கி குமாருக்கு ரகசிய தகவலின்பேரில் தெரியவந்தது.

அதில், பாரதி நகர் என்ற பகுதியில் தனிப்பிரிவு காவல் உதவிஆய்வாளர் ஒருவரது வீட்டின் அருகில் மணல் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. பின்னர், வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சரவணன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 30 யூனிட் மணலை பறிமுதல்செய்தார்.

மேலும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மணல் கடத்தி விற்பனையில் ஈடுபட்டுவரும் மணல் கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:Simbu-வுக்கு இப்படியும் ஒரு ரசிகனா.. சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த அட்ராசிட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details