தமிழ்நாடு

tamil nadu

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - சசிகலா

By

Published : Sep 23, 2022, 8:59 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - சசிகலா
அதிமுக பொதுச்செயலாளர் குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - சசிகலா

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக தனது அரசியல் சுற்றுப் பயணத்தை சசிகலா நேற்று (செப் 22) தொடங்கினார். ஊத்துக்கோட்டையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டம், கண்காணிக்கப்பட்டு சத்தான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிமுகவில் பொதுச்செயலாளர் குறித்து முடிவெடுப்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களால்தான் முடியும்.

அதிமுக பொதுச்செயலாளர் குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - சசிகலா

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த அனுமதிகோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details