தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூரில் மாணவி தற்கொலை சம்பவம்: மீண்டும் தொடங்கிய வகுப்புகள்

By

Published : Aug 11, 2022, 10:49 PM IST

மீண்டும் தொடங்கிய வகுப்புகள்
மீண்டும் தொடங்கிய வகுப்புகள் ()

திருவள்ளூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வகுப்புகள் தொடங்கின.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 859 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 83 பேர் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருத்தணி அருகே தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிவிடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டு விசாரித்து வரும் நிலையில் தற்போது 16 நாட்களுக்குப் பிறகு மாணவிகள் நலன் கருதி 6 முதல் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் பள்ளி விடுதியில் படித்து வந்த 83 மாணவிகளில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த 20 பேர் பள்ளி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மேலும் விடுதியில் தங்கி படித்து வந்த மற்ற மாணவிகளை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:குப்பை தொட்டியில் இறந்த நிலையில் குழந்தை கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details