தமிழ்நாடு

tamil nadu

விவசாய பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!

By

Published : Jul 28, 2020, 9:07 PM IST

திருவள்ளூர்: இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு காப்பீடு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

all e-seva centers works in 24 hours for apply kharif crops loan
all e-seva centers works in 24 hours for apply kharif crops loan

குறுவை சாகுபடி பருவத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் சொர்ணவாரி பருவ நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இம்மாத இறுதிக்குள் (31.07.2020) அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பிரீமியம் செலுத்துவதற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடன்பெறா விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பில் 50விழுக்காடு பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சென்னை வழங்கியுள்ள அறிவுரையின் படியும், இம்மாத இறுதிவரை அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவின் படியும் விவசாயிகள் எவ்வித சிரமமுமின்றி பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தவும், பிரீமியம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன்படி 31.07.2020 வரை அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பரவுதலை தடுத்திடும் பொருட்டு அனைத்து இ-சேவை மைய நிர்வாகிகளும் முகக் கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளி பின்பற்றியும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொண்டு மையத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பிரீமியம் தொகையினை செலுத்தி இத்திட்டத்தில் பயனடையுமாறும், தகவல்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகவும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details