தமிழ்நாடு

tamil nadu

ஆதிதிராவிடர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

By

Published : Oct 29, 2021, 8:42 PM IST

ஆதிதிராவிடர் மக்களுக்கு அடிப்படை வசதிகள், செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

minister
minister

திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த தொளவேடு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ. 70 லட்சம் மதிப்பில் ஆரம்பபள்ளியில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் வெளியில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆதிதிராவிடர் மக்களுக்கு அடிப்படை வசதிகள், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிட மக்கள் கல்வியிலும், பொருளாதார அடிப்படையிலும், சமூகத்தில் முன்னேற்றத்தை கொண்டு வர துறைரீதியாக முதலமை‌ச்ச‌ர் வழிகாட்டுதலின் பேரில் செயல்பாடுகள் இருக்கும் என்றார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறையின் புதிய அறிவிப்புகள்

ABOUT THE AUTHOR

...view details