தமிழ்நாடு

tamil nadu

நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்

By

Published : Apr 5, 2023, 10:21 PM IST

கோவை மாநகர துணை காவல் ஆணையராக இருந்த சிலம்பரசன் நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்
நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த அதிரடி மாற்றம் அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூர முறையில் பிடுங்கிதாக எழுந்த சர்ச்சைக்கு பின் நடந்துள்ளது.

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகர காவல் துணை காவல் ஆணையராக இருந்த சிலம்பரசன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகம், கோயம்புத்தூர் மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

நெல்லை, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விகேபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செல்லப்பா, இசக்கிமுத்து, ரூபன் அந்தோணி, மாரியப்பன், சூர்யா, லட்சுமி சங்கர், வேத நாராயணன் மற்றும் சுபாஷ் உள்ளிட்டோர் சார் ஆட்சியரிடம் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், கோவை மாநகர துணை காவல் ஆணையராக இருந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:பல்வீர் சிங் விவகாரத்தில் சம்மன் கிடைக்கப்பெறாதவர்களும் விசாரணைக்கு ஆஜராகலாம்

ABOUT THE AUTHOR

...view details