தமிழ்நாடு

tamil nadu

களக்காட்டில் என்ஐஏ டீம் விசாரணை

By

Published : Jul 24, 2021, 5:09 PM IST

களக்காட்டில் முஸ்தபா என்பவரின் வீட்டில், என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

nia
என்ஐஏ

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வசிக்கும் முஸ்தபா என்பவரின் வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் (என்ஐஏ) இன்று (ஜூலை.24) சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திடீர் நகர் காவல் நிலையத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். அதுதொடர்பான சாட்சியங்களுக்காக அப்துல்லாவிடம் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. என்ஐஏ அலுவலர்களின் திடீர் சோதனையால், களக்காடு பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இதையும் படிங்க:சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details