தமிழ்நாடு

tamil nadu

குறைந்த விலையில் காய்கறிகள் விற்றும், மக்கள் வராததால் வியாபாரிகள் வேதனை

By

Published : Apr 17, 2020, 12:18 AM IST

திருநெல்வேலி: காய்கறிகளின் விலை குறைவாக இருந்தும் காவல்துறையினர் கெடுபிடி காரணமாக மக்கள் வெளியே வராததால் காய்கறிகள் போதியளவு விற்பனையாகவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

market sales down in tirunelveli due to police restriction
market sales down in tirunelveli due to police restriction

கரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் வெளியே வருவதை கட்டுபடுத்தும் விதமாக சிவப்பு, பச்சை, ஊதா என மூன்று வண்ணங்களில் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த அட்டைகளைப் பயன்படுத்தி வாரம் இரண்டு நாள்கள் ஒரு நபர் மட்டும் வந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வியாபாரிகள் வேதனை

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ஊரடங்கு தொடக்கத்தில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் காய்கறி மார்கெட்களை பிரித்து எல்லாப் பகுதிகளிலும் வைத்துவிட்டனர். விலைகள் சற்று அதிகமாக இருந்தாலும் விற்பனை நன்றாக இருந்து வந்தது. இப்போது மக்கள் வெளியே வர அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால், காவல்துறை கெடுபிடி காரணமாக மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இக்காரணங்களால் காய்கறிகள் போதிய அளவு விற்பனை நடைபெறவில்லை. எனவும் முந்தைய நாள்களை விட தற்போது காய்கறி விலைகள் குறைந்தே விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.

இதையும் படிங்க...தர்மபுரியில் அத்தியாவசியப் பொருள்கள் விற்க தடை

ABOUT THE AUTHOR

...view details