தமிழ்நாடு

tamil nadu

ஊரக உள்ளாட்சி தேர்தல் - திருநெல்வேலியில் 6,871 பேர் மனு

By

Published : Sep 23, 2021, 10:59 AM IST

Updated : Sep 23, 2021, 2:12 PM IST

election

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆறாயிரத்து 871 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையடுத்து செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22 மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான நேற்று (செப்.22) வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (செப்.23) நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் ஆறாயிரத்து 871 பேர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட 2,069 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சி தேர்தல் - பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்

Last Updated :Sep 23, 2021, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details