தமிழ்நாடு

tamil nadu

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை!

By

Published : May 5, 2022, 6:39 AM IST

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை!
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை!

நெல்லை: தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வழக்கமாக மே மாதம் வரும், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஏப்ரல் 4) தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பிற்பகல் வரை கோடை வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது.

குறிப்பாக நெல்லை சந்திப்பு டவுன், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் 20 நிமிடம் கனமழை பெய்தது. மழையுடன் சேர்ந்து காற்றும் பலமாக வீசியது. இதன் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

நெல்லையில் சில நாட்களாக சராசரியாக 100 டிகிரி வரை வெயில் பதிவானது. நேற்று அதிகபட்சம் 102 டிகிரி வெயில் பதிவாகியதால் அனல் தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதி அடைந்த நிலையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் வரும் ஆறாம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விக்னேஷின் உடலில் 16 காயங்கள்; தலையில் 1 செ.மீ ஆழத்திற்கு காயம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details