தமிழ்நாடு

tamil nadu

எல்ஐசியில் இருந்து பேசுவதாகக்கூறி மூதாட்டியிடம் வங்கிக்கணக்கு எண் பெற்று மோசடி - மூவர் கைது

By

Published : Oct 5, 2022, 6:51 PM IST

Etv Bharat
Etv Bharat ()

தேனியில் எல்ஐசியில் இருந்து பேசுவதாகக் கூறி மூதாட்டியிடம் வங்கி கணக்கு எண் பெற்று நூதன கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

தேனி: போடி அருகே மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதம்(78). இவர் தனது கணவர் இறந்த நிலையில், மகள் ஸ்ரீதேவி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை.6ஆம் தேதி, அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட நபர் தங்களது கணவர் கந்தசாமி எல்.ஐ.சியில் செலுத்திய பணத்திற்கான முதிர்வுத்தொகை 37 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், அதனை நீங்கள் பெறுவதற்காக உங்கள் வங்கிக் கணக்குத் தருமாறு கேட்டுள்ளார்.

இதனை நம்பிய ரஞ்சிதம் தனியார் வங்கியின் வங்கிக்கணக்கை கொடுத்துள்ளார். அதன் பிறகு தொடர்பு கொண்ட அந்த நபர் ரஞ்சிதத்திடம் மொபைலில் OTP குறுந்தகவல் பெற்று, தொடர்ச்சியாக ஐந்து முறை என மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாயை ரஞ்சிதத்தின் வங்கிக்கணக்கில் இருந்து கொள்ளையடித்திருக்கிறார்.

சிறிது நாட்கள் கழித்து தனது வங்கிக்கணக்கில் பணம் பறிபோனதை அறிந்த ரஞ்சிதம், போடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப்புகார் தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக மாற்றப்பட்டது.

இவ்விசாரணைக்காக, சைபர் கிரைம் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையில் மூன்று தனிப்படையினர் டெல்லிக்கு விரைந்து, அங்கு வடமேற்கு டெல்லியில் வசித்து வந்த சதாசிவம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த வில்சன் குமார் மற்றும் முருகன் இருவரும் இவ்வழக்கில் சிக்கினர்.

பின் விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் மூன்று செல்போன்கள், ஒரு வங்கிக் கணக்கு புத்தகம், மற்றும் ரூ.1,49,000 தொகையையும் பறிமுதல் செய்தனர். மூவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்!

ABOUT THE AUTHOR

...view details